Friday, June 4, 2010

உங்களுக்குத் தெரியுமா? - 1


உங்களுக்குத் தெரியுமா ?

பெரிய வேதாகமம்! சிறிய வேதாகமம்!!


இவ்வுலகிலேயே மிகப் பெரிய வேதாகமம்

லாஸ் ஏஞ்சல் பட்டணத்திலுள்ள ஒரு தச்சன் இரண்டு வருடங்கள் இரவு பகலாக உழைத்து மரப்பலகைகளால் வேதாகமத்தைச் செய்து முடித்தார்.

ஒவ்வொரு பக்கமும் 3 அடி உயரமுள்ள பலகையால் செய்யப்பட்டது. அதில் எழுத்துக்கள் உளி வெட்டாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவ் வேதகமத்திற்க்கு 8048 பக்கங்களுண்டு. இதன் மொத்த எடை 1206 பவுண்டு. இதன் பருமன் 8.2 அடியாகும்.



இவ்வுலகிலேயே மிகச் சிறிய வேதாகமம்

இங்கிலாந்து தேசத்தில் அச்சடிக்கப்பட்ட மிகச் சிறிய வேதாகமம் 878 பக்கங்கள் அடங்கியது. இதன் நீளம் 1 3/4 அங்குலம் (ஒரு தீக்குச்சியின் நீளம்) அகலம் 1 1/4 அங்குலம். பருமன் 13/16 அங்குலம் மாத்திரமே. இவ்வேதகமத்திற்க்குள் அநேகம அழகிய சிறு படங்களும் உண்டு.

உருப்பெருக்கிக் கண்ணாடியின் உதவியால் இதை எளிதாக வசிக்க முடியும். அதன் எடை 20 கிராம் மாத்திரமே. ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை.

1 comment:

  1. வணக்கம். நல்ல தகவல்கள். தொடர்ந்து வெளியிடவும்.
    செரின்

    ReplyDelete