Saturday, June 19, 2010

உங்கள்ளுக்கு தெரியுமா ? -2


1,000 கிலோ எடையில் 1,330 திருக்குறள் !

ஆயிரம் கிலோ எடையில் செய்யப்பட்டுள்ள திருக்குறள் புத்தகம் செம்மொழி மாநாட்டின் போது முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
8 அடி உயரம், 5 அடி அகலத்தில், 1000 கிலோ எடை கொண்ட இந்த திருக்குறள் புத்தகத்தை வி.ஜி.பி நிறுவனம் உருவாக்கியுள்ளது.138 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் 133 அதிகாரங்களைக் கொண்ட 1,330 திருக்குறள்கள் அச்சிடப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் செலவில், 40 பணியாளர்கள் ஒருமாத காலத்திற்கும் மேலாக அரும்பாடுபட்டு இந்த புத்தகம் தயாராகி உள்ளது.
உலகின் புதிய சாதனையாக   கருதப்படும்  இந்த திருக்குறள் புத்தகத்தை, செம்மொழி மாநாட்டின்போது முதல்வர் கருணாநிதியிடம் அன்பளிப்பாக வழங்கப்படும் என  விஜிபி உலகத் தமிழச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் தெரிவித்துள்ளார்.

                                                                                                  -    -    -    -    -

ஒரு மணி அடித்தால் ஒரு குறள் ! : சென்னையில் ஏற்பாடு !!

      சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மணிக்கூண்டில் ஒவ்வொரு மணி அடிக்கும் போது திருக்குறள் ஒன்றும், அந்தக் குறளுக்கு பொருளும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கோவை மாநகரில் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழை நினைவுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுக்க நடைபெற்று வருகின்றன. இதில் ஒன்றாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
இதற்கான விழா சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது அவ்வளாகத்தில் உள்ள, மறுக்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ள மணிக்கூண்டில் ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் திருக்குறள் ஒன்றும், அதன் பொருளும் ஒலிக்கும்படி செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
மணிக்கு ஒரு குறள் வீதம் 24 மணி நேரத்தில் 24 குறள்களும், அவற்றுக்கான பொருளும் ஒலிக்கும் வகையில் இந்த மணிக்கூண்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                                                                            -    -    -    -    -

No comments:

Post a Comment